இடர்காலப்பகுதியில் தன்னலம் பாராமல் இரவு பகலாக சேவை புரியும் யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்கள்…!!

கொரோனோ வைரஸ் தொற்று பரவும் இன்றைய இடர் காலப் பகுதியில் வைத்தியர்கள் தாதியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என அனைவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர். குறிப்பாக புதுவருடத்தையும் பொருட்படுத்தாது இரவு பகலாக உத்தியோகத்தர்கள் சேவையாற்றி வருவதை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வரவேற்று பாராட்டி பெருமிதம் அடைந்துள்ளார்.உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணத்திலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு சந்தேகத்தில் யாழ் போதனாவிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதேபோன்று கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டும் இருக்கின்றனர்.அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக கொரோனா தொற்று தாக்கத்தின் இடர்காலப் பகுதியாகிய இந்தக் காலத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள்.மற்றும் ஊழியர்கள் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர்.குறிப்பாக புதுவருடம் பிறந்துள்ள நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாது இரவு பகலாக சேவையாற்றி வருகின்ற வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்தவர்களையும் பணிப்பாளர் பாராட்டியுள்ளார்.அத்தோடு அவர்களின் இந்தச் சேவையை பார்த்து வரவேற்று அவர்களுக்கான ஆதரவையும் உதவிகளையும் பணிப்பாளர் வழங்கி வருகின்றார்.