இளநீர் பறிக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!!

குருநாகல் – இப்பாகமுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இளநீர் வியாபாரி ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் எதிர்பாராத விதமாக நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன், ஏறாவூர் – மக்காமடி ஆதம்லெப்பை குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் தாவூத் சலீம் முஹம்மது றிபான் (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் குருநாகல் – இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள தென்னந் தோப்புக்களிலுள்ள தென்னை மரங்களில் ஏறி இளநீர்க் குலையைப் பறித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.உதவிக்கு விரைந்தவர்கள் மின்சாரம் தாக்கிய குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது, வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகளின் பின், ஏறாவூருக்கு எடுத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த, பொலிஸார் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.