கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் குணமடைவு..!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்று வெளிநாட்டினர் உட்பட 18 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்து தலா ஒன்பது பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 3,088 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை இரு கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,283 ஆக உயர்வடைந்துள்ளது.மத்திய கிழக்கிலிருந்து வந்த ஒரு கடற்படை வீரரும், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவரும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.தற்போது ஒன்பது வெளிநாட்டினர் உட்பட 182 கொரோனா தொற்றாளர்கள் ஐந்து வைத்தியசாலைகளில் சிசை்சை பெற்று வருகின்றனர்.அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 33 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.