கனடாவில் கொரோனாவிற்கு பலியான கிளிநொச்சிப் பெண்மணி..!!

கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரொனா தொற்றினால் நேற்று (13) உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் வசித்து, பின்னர் கனடா ரொறன்ரோவில் குடியேறிய புஸ்பராணி நாகராஜா (56) என்பவரே உயிரிழந்துள்ளார்.இவரது குடும்பத்தினரே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரம்டன் வைத்தியசாலையில், இவரது கணவர் நாகராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்தவாரம் புஸ்பராணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.இவர்களது 3 பெண் பிள்ளைகளும் வீட்டில் சுய தனிமைப்பட்டுள்ளனர்.