பீனிக்ஸ் பறவையாக கொரோனாவிலிருந்து மீண்டு வந்த 101 வயதுத் தாத்தா..!!கொத்து கொத்தாக மடியும் இத்தாலியில் நடந்த அதிசயம்!

கொரோனாவின் பாதிப்பு இத்தாலியில் தீவிரமாகிய நிலையில் உயிர்ச்சேதம் அதிகரித்தும் வருகின்றது. இந்நிலையில் 101 வயது ‘பி’ என்கிற தாத்தா கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. குறித்த முதியவர் 2வதாக பரவும் கொள்ளை நோயிலிருந்து தப்பித்துள்ளவர் என்று கூறப்படுகின்றது. தாத்தாவின் சொந்த ஊரானது கடலோர நகரமான ரிமினி ஆகும். இவர் குறித்து அந்த நகர துணை மேயர் குளோரியா லிசி கூறுகையில், ” மிஸ்டர் பி 1919ம் ஆண்டு பிறந்தவர். அதாவது ஸ்பானிஷ் ஃப்ளூ நமது நாட்டை சூறையாடிக் கொண்டிருந்தபோது பிறந்தவர் இவர். 1918ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி 1920ம் ஆண்டு டிசம்பர் வரை இத்தாலியை சூறையாடியது இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ.

உலகம் முழுவதும் இந்த கொள்ளை நோய்க்கு 5 கோடி பேர் உயிரிழந்தனர் என்றும் அதிலிருந்து தப்பித்த தாத்தா தற்போது கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.குறிப்பாக கொரோனா வைரஸ் முதியவர்களை தாக்குகின்றது என்றும் பெரும்பாலானோர் மரித்துப்போகின்றனர் என்று சோகத்தில் இருந்த தருணத்தில் குறித்த 101 தாத்தா மீண்டு வந்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.இவர்தான் கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளான அதிக வயதுடையவர் என்ற சாதனையும் படைத்தார். இந்த சம்பவத்தினால் இத்தாலி மக்கள் பெரும் நம்பிக்கையில் காணப்படுகின்றனர்.