உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி..!!

கொரோனா வைரஸ் நோய்க்கு (கோவிட் -19) எதிரான ரஷ்யாவின் பரிசோதனை தடுப்பூசியான ஸ்பூட்னிக் 5 யை செலுத்திய பின்னர் ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

40 ஆயிரம் தன்னார்வலர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை ஸ்பூட்னிக் 5 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.இவர்களில் 14 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தப்பட்ட 24 மணி நேரத்தின் பின்னர் தசை வலி, வீக்கம் மற்றும் அவ்வப்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை சந்தித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் முராஷ்கோ கூறியுள்ளார்.
img class=”alignnone size-full wp-image-20160″ src=”https://www.newlanka.lk/wp-content/uploads/2020/09/5f60bf9b85f5400a130590d5.jpg” alt=”” width=”2450″ height=”1377″ />
ஸ்பூட்னிக் 5 இன்னும் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை முடிக்கவில்லை. எனினம் கடந்த மாதம் ரஷ்ய அரசாங்கத்தால் இது அங்கீகரிக்கப்பட்டது.ஸ்பூட்னிக் 5 மனிதனில் பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி ஆகும். அதன் இறுதி மருத்துவ பரிசோதனைகள் இந்த மாதத் தொடக்கத்தில் மொஸ்கோவில் ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.