தீவிரமடையும் லடாக் எல்லை விவகாரம்…வாய்ப் பேச்சால் மட்டும் சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!!

சீனா போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் இந்தியாவால் குளிர்காலத்தில் திறம்பட செயற்பட முடியாது என இந்திய படை பலத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா மேற்படி தெரிவித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு பிராந்திய இராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர், “ லடாக்கில் உயரமானது முதல் மிக உயரமானது வரையிலான மலைகள் உள்ளதுடன், அங்கு 40 அடிவரை கடும் பனிப்பொழிவு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.காற்றின் குளிர்ச்சியான காரணி துருப்புகளுக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும் எனத் தெரிவித்த அவர் பனிப்பொழிவால் சாலைகளும் மூடப்பட்டிருக்கும் அதேவேளை இவை அனைத்தையும் மீறி, இந்திய படைகளுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பது என்னவென்றால் இந்திய வீரர்கள் குளிர்கால போரின் பெரும் அனுபவத்தை கொண்டுள்ளனர் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், சீனா எப்போதுமே போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால் அவர்கள் சிறந்த பயிற்சி பெற்ற சிறந்த முறையில் தயார்படுத்தப்பட்ட, முழுமையாக ஓய்வு எடுக்கப்பட்ட, உளவியல்ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.