வரலாற்றில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலைத்தில் ஒரே நேரத்தில் 26 ஸ்ரீலங்கன் விமானங்கள்..!!

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை தேசிய விமான சேவைக்கு சொந்தமான 26 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விமான நிலைய ததலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் உத்தரவிற்கமைய இந்த பாதுகாப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றமையினால் விமன பயணங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் முகம் கொடுக்க கூடிய வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.