வீதியோரத்தில் கண்ணாடிப் போத்தல்களை உடைத்து உணவாக உட்கொண்ட விசித்திர நபர்.!! வவுனியாவில் பரபரப்பு.!

போத்தலை உடைத்து அதை உணவாக உட்கொண்ட நபரை, பொதுமக்கள் மீட்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், கண்ணாடி போத்தலை உடைத்து அதனை வாயில்போட்டு உணவாக உட்கொண்டுள்ளார்.இதனால், காயமடைந்து வாயிலிருந்து குருதி வெளியேறிய நிலையிலும், குறித்த நபர் உட்கொள்வதை நிறுத்தவில்லை.

இதனை அவதானித்த சிலர், வைத்தியசாலையில் கடமையில் இருந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவத்தை அவதானித்த பொலிஸார், குறித்த நபரை மீட்டு அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.