கொழும்பு துறைமுக நகரில் கோல்ப் விளையாடிய பிரதமர் மஹிந்த..!! (வைரலாகும் புகைப்படங்கள்)

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் பார்வையிட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்காக 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்துள்ளன. இருப்பினும் இதன் கட்டுமானப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்டுள்ளார்.இதன்போது, பொது கடற்கரையில் அமைந்துள்ள அக்வா கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாட்டிலும் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.அவர் கோல்ப் விளையாட்டில் ஈடுபடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்படத்தக்கது.