யாழ்ப்பாணத்திற்குள் புகுந்துள்ள மிகவும் ஆபத்து மிகுந்த மிருகம்.!!சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

யாழ்ப்பாணம் – கைதடி ஏ9 வீதியில் இருந்து 50 மீற்றர் தொலைவில் செம்மணி மயானம் அருகே ஒரு வகையான நரிகள் இனங்காணப்பட்டுள்ளன.குறித்த நரிகளை இதற்கு முன் கண்டதில்லை என்று எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இவை எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை. ஆனால், இந்த நரிகள் மனிதருக்கு ஆபத்தானவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வழியாக இரவிலும் பகலிலும் பலர் வந்து செல்வதால், அவர்களுக்கு இந்த நரிகள் ஆபத்தாக இருக்கலாம்.அத்துடன் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களே இவற்றிடமிருந்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்படுகின்றனர்.