இறுதிச்சடங்கு கூடத்தில் அசந்து தூங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்..!! உயிருடன் தகனம் செய்த ஊழியர்கள்..!!

அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் குவியும் நிலையில் இறுதிச்சடங்கு கூடத்தில் அசந்து தூங்கியவரை இறந்தவர் என்று தவறாக நினைத்து தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அங்கு இதுவரை 22,115 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் நியூயோர்கில் தான் அதிகப்படியான பாதிப்பு உள்ளது.நியூயார்க்கில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதிச்சடங்கு கூடத்தில் சடலங்கள் குவிந்து வருகிறது.அங்குள்ள இறுதிச்சடங்கு கூடம் ஒன்றில் வேலைபார்க்கும் 48 வயதான மைக்கேல் ஜோன்ஸ் 16 மணி நேரம் தொடர்ச்சியாக வேலைப் பார்த்து உள்ளார்.

இதன் காரணமாக அசதியில் அங்கிருந்த ஸ்டெரக்சரில் அசந்து தூங்கி உள்ளார். அவருடன் வேலைபார்க்கும் சகஊழியர் இறந்தவரின் சடலம் என்று தவறாக நினைத்து அவரை உயிருடன் தகனம் செய்துள்ளார் என்று பொலிசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக மைக்கேல் உடன் பணியாற்றும் சகப்பணியாளர் ஆன்டர்சன் கூறுகையில், மைக்கேல் உயிருடன் எரியூட்டப்பட்டப் போது அவர் வெப்பம் காரணமாக அலறி உள்ளார்.

சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பதற்குள் அவர் சாம்பாலாகி விட்டார். 1400 முதல் 1800 ஃபெரான்ஹிட் வெப்பத்தின் காரணமாக அவர் 15 நொடிகளில் உயிரிழக்க நேரிட்டது என கூறியுள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்