கொரோனாவால் கதிகலங்கி நிற்கும் இந்தியா.!! கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கொரோனா தொற்று..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 1,290 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,066 ஆக அகரித்துள்ளது.கொரோனா பாதித்தவர்களில் தற்போது 9 இலட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 39 இலட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் இதுவரை 5 கோடியே 94 இலட்சத்து 29 ஆயிரத்து 115 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் 11 இலட்சத்து 16 ஆயிரத்து 842 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.