சிறை மீண்டார் சிவாஜி..எச்சரிக்கையுடன் பிணை வழங்கியது யாழ்.நீதிமன்றம்..!!

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுட்டித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை பிணையில் விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்றுப் பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் பொலீசார் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  திலீபனின் நினைவிடம், யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் பொலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், தடையை மீறி  திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார். இதானல் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அவரை 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருந்தது. அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.