இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தியுரும்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.