மிக விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறப் போகும் இரத்மலானை விமான நிலையம்..!!

மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.அது தொடர்பில் சர்வதேச விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இரத்மலானை விமான நிலையத்தினுள் சர்வதேச விமான செயற்பாடுகளை அதிகரிப்பதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எல்லை விமான செயற்பாட்டிற்கு உள்ள கோரிக்கையை கருத்திற்கொண்டு, மாலைத்தீவு மற்றும் இந்தியாவிற்கு விமான பயணத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய இரத்மலானை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கு மிகப்பெரிய நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.