2,000ம் ஆண்டுக்கு முன்னர் எமது மூதாதையர்கள் கூறிய விடயம்.!! இன்று வெள்ளைக்கார விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில்.!!

கொம்பேறி மூக்கன் என்னும், ஆண் சாரைப் பாம்பு கடித்தால், தேள் கடித்தால் ஆமாவாசையில் குறண்டும் என்பார்கள் தமிழர்கள். மேலும் சொல்லப் போனால் சந்திரனுக்கும் மனிதர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற விடையத்தை முதன் முதலாக உலகிற்கு சொல்லியவர்கள் தமிழர்கள்.
இன்று கூட சில தமிழர்களே … என்ன சந்திரனுக்கும் மனிதர்களுக்கும் சம்பந்தம் உண்டா ? என்று கேலி செய்யலாம். நம்ப மறுக்கலாம். . ஆனால் அது உண்மை தான் என்கிறார்கள் 25 வருடமாக ஆராட்சி நடத்திய விஞ்ஞானிகள். மக்களால் அதிகம் வாசிக்கப்படும், நியூ சயன்டிஸ் என்னும் ஊடகத்தில் இருந்து பெறப்பட் உண்மை தகவல் இவை.

அமாவாசை மற்றும் பெளர்ணமி போன்ற தினங்களில், சந்திரனின் ஈர்பு விசையால் பூமியில் பல மாற்றங்கள் தோன்றுகிறது என்று முதன் முதலாக கண்டறிந்தவன் தமிழன் என்றால் அது மிகை ஆகாது. அதனை தமிழர்கள் “கனத்த நாள்” என்று கூறுவது வழக்கம். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள், சந்திரனின் ஈர்ப்பு விசையால் பூமியில் கடல் கொந்தளிக்கிறது, என்றும். கடல் வாழ் உயிரினங்களில் ஒரு வகையான மாற்றம் அன்றைய தேதிகளில் தென்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.உதாரணமாக ஆக்டபஸ் என்னும் கணவாய் மீனை எடுத்துக் கொண்டால். அவை தமது இனப் பெருக்கத்தை கனத்த நாட்களில் தான் செய்கிறது. ஆனால் அது ஏன் என்று இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை என்கிறார்கள் ஐரோப்பிய விஞ்ஞானிகள். இது போக மனிதர்களின் மனதில், அமாவாசை மற்றும் பெளர்ணமி போன்ற தினங்களில் மன மாற்றம் ஏற்படுவதாகவும். இது ஏன் இடம்பெறுகிறது என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். இதனை தமிழர்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பது பெருமையான விடையம். மஞ்சல் உடலுக்கு நல்லது, என்றான் தமிழன். 1,000 ஆண்டுகள் கழித்து தற்போது அதனை உறுதி செய்கிறார்கள் வெள்ளையர்கள்.அது போலவே சந்திரனுக்கும் மனிதர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்ற உண்மையை தமிழர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னரே அறிந்து வைத்திருக்கிறார்கள். மன அழுத்தம் உள்ள நபர்களின், நிலை அமாவாசை அல்லது பெளர்ணமியில் மாறு படுகிறது. அவர்கள் வக்கிரமாக மாறி பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறார்கள் என்ற விடையத்தை தமிழர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னரே அறிந்து வைத்திருந்துள்ளார்கள். தற்போது தான் வெள்ளை இனத்தவர்கள் மீனில் இருந்து ஆரம்பித்து , மனிதர்களில் மாற்றம் ஏற்படுகிறது என்ற உண்மையை கண்டறிந்து, ஆய்வு நடத்தி வருகிறார்கள்.அந்த வகையில் பார்க்கப் போனால், தமிழர்கள் கண்டறிந்துள்ள ஜாதகம் என்னும் விடையம் கூட இன்று உண்மை என்றாகிவிட்டது. சந்திரனின் தாக்கம், சூரியனின் தாக்கம் என்பது போன்ற பல விடையங்களை தமிழன் துல்லியமக கணித்து வைத்திருந்துள்ளான். தமிழ் இனம் என்பது உலகில் மிகவும் போற்றத்தக்க ஒரு இனம் மட்டும் அல்ல. மிக மிக புத்தி ஜீவிகளை கொண்ட ஒரு இனமாக இருக்கிறது. தமிழர்களாக நாம் பிறந்து இருப்பதே ஒரு பெருமையான விடையம் என்பதே உண்மை.

ஓளவைப் பாட்டி, அணுவை துளைத்து என்ற வார்த்தையை எத்தனை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாவித்து இருக்கிறார். அணு என்பது ஒரு நுன் துகள் என்பது தமிழர்களால் வரை அறுக்கப்பட்ட ஒரு விடையம். மூலக் கூறுகள் பற்றி, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் அறிந்துள்ளான் என்றால், தமிழன் பெருமையை என்னவென்று கூறுவது ? டெலஸ் கோப் கண்டு பிடிக்க, பல நூறு வருடங்களுக்கு முன்னரே, நவக் கிரகங்கள் என்ற வார்த்தை பாவிக்கப்பட்டு உள்ளது.அதாவது 9 கிரகங்கள் என்பது பொருள். அன்றே தமிழன் சூரியனை 9 கிரகங்கள் சுற்றி வருகிறது என்று கூறி விட்டான். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றியது தமிழ் என்பார்கள். அது உண்மை தான். நாம் அனைவருமே பெருமைப்பட வேண்டும் தருணங்கள் இவை.போயும் போய்… 500 வருடங்களுக்கு முன்னர் பாலி என்னும் மொழியோடு கலந்து, சிங்கள மொழியை உருவாக்கிய இந்த சிங்களவனுக்கு போய் நாம் எம்மை பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இல்லை. தமிழர்கள் ஒன்றும் வந்தேறு குடிகள் அல்ல. பூர்வீக மக்கள். அதுவும் இலங்கை தமிழன் என்றால் கலப்பற்ற, சுத்த தமிழன் என்பது பொருள். நெஞ்சை நிமிர்த்தி பெருமையாக தமிழ் பேசும் தருணம் இவை தான்…

நன்றி:Athirvu