கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11 பேர் பூரண குணமடைவு..!!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 16.ஆக அதிகரித்துள்ளது.மேலும் தொற்று உறுதியானவர்களில் 234 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இலங்கையில் இதுவரை 3 ஆயிரத்து 263 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.