கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்த வடக்கில் தனித்தீவு..!

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் எவராவது சட்டவிரோதமாக ஊடுருவினால் அவர்களைத் தடுத்து வைப்பதற்கு வடக்கில் தீவொன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்து கடல் மார்க்கமாக யாராவது இலங்கைக்குள் ஊடுருவினால் அவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்த வடக்கில் தனித் தீவொன்று தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மேலும் கூறுகையில், வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாலைதீவு என்று தீவொன்று உள்ளது.அந்த தீவில் எந்தவொரு நபரும் தற்போது இல்லை. அவ்வாறு யாராவது வந்தால் அங்கு தடுத்து வைக்க முடியுமா என்ற கருத்தாடல் உருவானது.கடற்படையிடம் தான் இது பற்றிகூறப்பட்டது. தேவையேற்படும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கோ அல்லது எவரையாவது தடுத்துவைப்பதற்கோ இவ்வாறு தீவொன்று எம் வசம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.