இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசருக்கு ஐ.நாவில் உயர் பதவி!

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.மொஹான் பீரிஸ் விரைவில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளார். மொஹான் பீரிஸ் இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக பதவி வகித்தார்.கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அவர் அந்த பதவி வகித்தார். இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை சட்டமா அதிபராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.