ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெல பகுதியில் அமைந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிற்கு நபர் ஒருவர் வருகைத்தந்துள்ளார். எனினும் பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபருக்கு அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.குறித்த நபரிடம் ஊரடங்கு அனுமதி பத்திரம் எதுவும் இருக்கவில்லை என்பதை அங்கு கடமையில் இருந்த அதிகாரி அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த நபரிடம் பொலிஸார் பேசிக் கொண்டிருந்த போது, ரஞ்சன் ராமநாயக்க வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அத்துடன் பொலிஸரை கடுமையாக திட்டிய ரஞ்சன் குறித்த நபரை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.இதனால் பொலிஸாரின் கடமைக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய ரஞ்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.