இரணைமடு இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட புதிய பட்டதாரிப் பயிலுனர்கள்..!!

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு இன்றைய தினம் இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்தும் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளில் ஒரு தொகையினர் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடு இராணுவ முகாமுக்கு அழைத்து வரப்பட்டு, தலைமைத்துவ பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பான விளக்கத்தை கிளிநொச்சி மாவட்ட இராணுவ முகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவகொடவால் வழங்கப்பட்டது.அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல்,கிளிநொச்சி மாவட்டத்தில் அரச நியமனம் பெற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினர் இராணுவ முகாம்களுக்கு 21 நாட்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியினை இராணுவத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் அரச உத்தியோகத்தில் பிரசித்தி பெற்ற உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்தார்.