பாடசாலை மாணவர்களுக்கு நல்ல செய்தி… இன்று முதல் சிற்றுண்டிச்சாலைகள் திறப்பு..!

பாடசாலைகளில் இன்று (14) முதல் சிற்றுண்டிச்சாலைகளை திறக்க கல்வி அமைச்சு அனுமதித்துள்ளது. கொரோனா தாக்கத்தையடுத்து கடந்த சில மாதங்களாக பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பித்த போதும், சிற்றுண்டிச்சாலைகளை மீள திறப்பதை தாமதப்படுத்தி, இன்று அவற்றை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றியே சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்பட வேண்டும்.இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் செயலாள் பேராசிரியர் கபில பெரேரா ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாகாண கல்வி திணைக்களங்கள் ஊடாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டு, பாடசாலைககளில் சுகாதார நடைமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் சிற்றுண்டிச்சாலைக்குள் கூட்டமாக திரண்டு நிற்பது அனுமதிக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட அளவான மாணவர்களே அனுமதிக்கப்படுவதுடன், சமூக இடைவெளி பேணப்படும். மாணவர்களிடம் முற்கூட்டியே ஓர்டர் பெற்று, வகுப்பறைகளில் அவற்றை விநியோகிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.