மணிவண்ணன் தலைமையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணிகள் அணி உருவாக்கம்.!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ஏற்பாட்டில் சட்டத்தரணிகள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நேற்று (12) நடந்த நிகழ்வில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.யாழ்ப்பாணத்தில செயற்படும் கணிசமான இளம் சட்டத்தரணிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு, வி.மணிவண்ணனிற்கான தமது ஆதரவை தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.அதில், கலந்து கொண்ட சட்டத்தரணிகள், மணிவண்ணனுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.இந்த சட்டத்தரணிகள் அமைப்பின் மூலம் வடக்கு கிழக்கிலுள்ள சகல கிராம மக்களிற்குமான சட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களிற்கு சட்ட உதவி வழங்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள், எதிர்வரும் எந்த தேர்தலிலும் அகில இலங்க தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டாமென வலியுறுத்தினர்.தமிழ் காங்கிரஸை மீளுருவாக்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியொன்ற பெயரை போலியாக ஒரு குடும்பம் பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பொது கட்டமைப்பை உருவாக்கி, பொது சின்னமொன்றில் இனிவரும் தேர்தல்களில் களமிறங்க வேண்டுமென்றும், அப்படியொரு முடிவை மணிவண்ணன் எடுத்தால் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று சட்டத்தரணிகள் அணி ஒன்று அமைக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.அதன்போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சினைகளை கையாள்வதற்கு சட்டத்தரணிகள் அணியை உருவாக்குவதற்கும் ,அதில் இணைந்து பயணிப்பதற்கும் அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோவும் கலந்து கொண்டார்.