2020 ராகு-கேது பெயர்ச்சி…இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நடக்கப் போகும் திடீர் மாற்றம்..!! மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்..!

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் நிர்வாகத் திறன் உயரத் தொடங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல முறையில் பலன் கிடைக்கும். புதிய வண்டி, வாகனச் சேர்க்கை உண்டாகும். சிலர் தற்போது வசிக்கும் வீட்டை நல்ல முறையில் பழுது பார்ப்பீர்கள். எதிரிகள் விலகி ஓடிவிடுவார்கள். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்படும். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். பயணங்களாலும் நன்மைகள் உண்டாகும். பங்கு வர்த்தகத்தின் மூலமும் அவ்வப்போது சிறு லாபங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும் காலகட்டமிது.

13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் வழியில் தனித்தன்மையுடன் பயணப்படுவீர்கள்.புதிய வேகத்துடன் உங்கள் செயல்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அதேநேரம் அவசர முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது.

19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதேநேரம் சிறுசிறு சஞ்சலங்களும், குழப்பங்களும் உண்டாகும். அதனால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரக் காண்பீர்கள். உங்கள் செயல்களைச் சலிப்பில்லாமல் ஆற்றுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தையும் சரியான முறையில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வார்கள். பெற்றோர்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். ஆன்மிகத்தில் முன்பைவிட அதிக நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய ஊர்களுக்குச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வேகத்துடன் விவேகமும் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும். சிலருக்கு புதிய உத்யோகத்திற்கு மாறும் யோகமுண்டாகும். அலுவலக ரீதியாக பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார்கள். பலவகைகளிலும் வருமானம் உங்களைத் தேடி வரும். அதேசமயம் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். பழைய கடன்கள் வசூலாகும். போட்டி பொறாமைகள் கூடுதலாக இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். கடன் பிரச்னைகள் திடீரென்று முளைத்தாலும் அதை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தையில் உங்களின் விளை பொருள்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். கலைத்துறையினருக்கு இந்த காலகட்டத்தில் வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். அதேநேரம் மனதில் ஏற்படும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் அமைதியும், கணவரிடம் பாசமும் கூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். மாணவமணிகள் இந்த காலகட்டத்தில் பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேற்றம் அடையலாம். மற்றபடி நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாமர்த்தியமாகவும், பொறுமையுடனும் சமாளிப்பீர்கள். அதேநேரம் விளையாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

*****

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். கடமையை கண்ணாக நினைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மற்றவர்களின் நல்லெண்ணங்களுக்கு ஆளாவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். செய்தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். புனிதத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை, செயல்திறன் அதிகரிக்கும். உங்களின் பேச்சு அறிவுரைகளாக மாறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிரிகளையும் உங்கள் வசப்படுத்துவீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் வசூலாகும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகளும் திடீரென்று கிடைத்துவிடும். குடும்பத்தை விட்டு விலகியிருந்த உறவினர்களும் மறுபடியும் வந்து இணைவார்கள்.13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரையிலான காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளை வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைப்பீர்கள். பழைய வழக்குகளில் எதிராளிகள் சமாதானமாக முடித்துக்கொள்ள முன்வருவார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்ய நேரிடும். சீரான வருமானத்தால் பழைய கடன்களைத் தீர்த்து விடுவீர்கள். சமூகத்தில் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முக்கியமான விஷயங்களில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.

19.9.2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலக்கட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டும் நண்பர்களிடம் கோபம் கொள்ளாதீர்கள். சுற்றத்தார் உள்பட எவரிடமும் உங்களின் ஈகோவை காட்ட வேண்டாம். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். குழந்தைகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். செய்தொழில் மேம்பட புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.உங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தி திட்டமிட்டு காரியங்களைச் செய்து அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்களிடமும் இணக்கமாகப் பழகுவீர்கள். குடும்பத்திலும் சுமுகமான பாகப்பிரிவினைகள் ஏற்படும். இதனால் அசையாச் சொத்துக்களிலிருந்தும் வருமானம் வரத்தொடங்கும் காலகட்டமிது.

உத்யோகஸ்தர்கள் இந்த காலக்கட்டத்தில் அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவார்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாது. வியாபாரிகள்
வியாபாரத்தில் அனுகூலங்களைக் காண்பீர்கள். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் தொழிலை பெரிய அளவில் விரிவு படுத்த முடியாத நிலைமை ஏற்படும். தனிக்காட்டு ராஜாவாக நீங்கள் வியாபாரத்தில் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். தரமிக்க விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். இதனால் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு நீங்கள் செய்யும் விடாமுயற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் உண்டாகும். அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களைக் குறைகூறும் சக கலைஞர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். தடைபட்ட திருமணம் சிறப்பாக நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். மாணவமணிகள் இந்த காலகட்டத்தில் மதிப்பெண்கள் பெறுவதில் முதலிடத்துக்கு வருவீர்கள். விரும்பிய துறையில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டுத் தன்மையை குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

*****

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் கடினமாக உழைத்து மேன்மை அடைவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். சிலர் அடிக்கடி வெளியூர் பயணம் செய்ய நேரிடும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளும் கல்வியில் சாதனைகள் செய்வார்கள்.சட்டச் சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலையைத் தவிர்த்து விடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நெடுநாளாக தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உங்கள் சிந்தனையில் தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் காரியமாற்றுவீர்கள். எவரையும் குறை சொல்லாமல் உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கெüரவம் அந்தஸ்து உயரும். அனாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிப்பை தக்க வைத்துக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்; செய்தொழிலில் போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். ஒருகாலத்தில் திருட்டுப் போன பொருள்கள் திரும்ப உங்கள் கைக்கு வந்து சேரும் காலமிது.19. 9.2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் அரசு வழியில் கெüரவம், பாராட்டு, சன்மானம், வெகுமதிகள் கிடைக்கும். நேர் வழியில் சிந்தித்து சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். சிலர் ஏற்றுமதி தொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். குழந்தைகளை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அதோடு வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு சந்தையிலும் முதலீடு செய்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அதேநேரம் வசிக்கும் வீட்டை மாற்றும் எண்ணத்தை இந்த காலகட்டத்தில் சற்று தள்ளி வைக்கவும்.உத்யோகஸ்தர்களுக்கு இந்த ராகு – கேது பெயர்ச்சி காலகட்டத்தில் அனைத்து வேலைகளும் சற்று இழுபறியாகத்தான் நடைபெறும். வருமானமும் சுமாராகவே இருக்கும். மேலதிகாரிகள் சில நேரத்தில் சாதகமாகவும், சில நேரத்தில் பாதகமாகவும் செயல்படுவார்கள்; பொறுமையைக் கையாண்டு அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். சிலசமயம் உள் மனதின் தூண்டுதலால் சில தீய நிகழ்ச்சிகள் நிகழாமல் சக ஊழியர்களிடமிருந்து தப்பித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு சில திட்டங்கள் லாபம் தேடித்தரும்.

விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் பொருள்களின் விற்பனையைப் பெருக்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உங்களின் கௌரவம், அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். நீர் ஆதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். நிம்மதியாக உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். கால்நடைகளையும் வாங்கும் யோகம் உண்டு.அரசியல்வாதிகள் எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து, வெற்றிகரமாக செய்து முடித்து விடுவீர்கள். க தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பயணங்களால் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். கலைத்துறையினர் விழிப்புடன் இருந்து புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கும். சக கலைஞர்களின் அலட்சியப் போக்கை பக்குவமாகச் சமாளிக்க வேண்டிவரும். மற்றபடி சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். ரசிகர்களிடம் வெளிப்படையாக எதையும் பேச வேண்டாம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.பெண்மணிகள் மன நிம்மதியைப் பெறுவார்கள். தரும காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபாடு அதிகரிக்கும். தொடங்கிய வேலைகளை தீவிரமாக முடித்துவிடுவீர்கள். உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அனைவரையும் அனுசரித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையாக இருந்து சரிவுகளைத் தகர்ப்பீர்கள்.

பரிகாரம்: சீதாராமரை வழிபட்டு வரவும்.

*****

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் சுய முயற்சிகள் நல்ல பலனளிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். செய்தொழில் வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கையும், உடல் ஆரோக்கியமும் கூடும். ஆன்றோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். எப்போதும் ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். உங்களின் உறுதியான செயல்பாடுகள் அனைவரையும் கவரும். போட்டி பொறாமைகளையும் சாதுர்யமாக சமாளித்து விடும் காலகட்டமிது.13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் லாபகரமாகவே இயங்கும். புதிய மாறுதல்களைச் செய்து முன்னுக்கு வருவீர்கள். இழந்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுவீர்கள். மனதில் இருந்த விபரீத எண்ணங்களை ஓரங்கட்டிவிட்டு நேர்வழியில் சிந்தித்து செயல்படுவீர்கள். நயமாகப் பேசி புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக்குலுங்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். உங்களின் நீண்டநாள் கனவுகளும், திட்டங்களும் பலிதமாகும் காலகட்டமிது.19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் தோல்விகளைக் கண்டு துவளாமல் திட மனதுடன் பணியாற்றுவீர்கள். உங்கள் முதுகுக்குப் பின்னால் குறை கூறுபவர்களைப் பொருட்படுத்த மாட்டீர்கள். கடுமையாக உழைத்துப் பிறர் பாராட்டும்படி பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய தீராத பிரச்னை ஒன்று தானாகவே தீர்ந்துவிடும். குழந்தைகளாலும் புகழ், கெüரவம் உயரும். அதேநேரம் உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்; எவரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நீண்ட நாளைய ஆசை ஒன்றும் நிறைவேறக் காண்பீர்கள்.உத்யோகஸ்தர்கள் இந்த ராகு – கேது பெயர்ச்சியில் பொறுமையுடன் நடந்து கொண்டு வரும் சிரமங்களைச் சமாளித்துவிடுவீர்கள். சக ஊழியர்களுடன் பரஸ்பரம் அன்பை பலப்படுத்திக் கொள்ளவும். மேலதிகாரிகளை அரவணைத்துச் செல்லவும். வருமானம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளைச் செய்து விருத்தி அடைவீர்கள். உங்கள் மதிப்பு உயரும் காலகட்டமிது. விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். விவசாயத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளாலும் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி எதையும் சமாளிக்க முடியும், சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய பாக்கிகள் சற்று தாமதமானாலும் கைக்கு வந்து சேரும்.அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் தேவையானவற்றைச் செய்து அவர்களின் அதிருப்தியிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். பெயரும் புகழும் உயரும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையினர் சோர்வின்றி எதையும் சாதிக்கும் அளவுக்குத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையைக் கைவிடாதீர்கள். புதிய ஒப்பந்தங்கள் சில கை கொடுக்கும். சக கலைஞர்களால் சில உதவிகளைப் பெற நேரிடலாம். பாராட்டுகளும் பரிசுகளும் வந்து சேரப்போகும் காலகட்டமிது.பெண்மணிகள் கணவரிடமும், குடும்பத்தாரிடமும் நற்பெயர் எடுப்பதற்கு நாவடக்கம் தேவை. உடல் நலம் சீராக இருக்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவமணிகள் அதிகமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். மனக் குழப்பங்களைத் தவிர்க்க தியானம், பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். விளையாட்டுகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும்.