விருந்திற்கு சென்ற இடத்தில் நாட்டின் தலைமையை அவமதித்துப் பேசிய ஐந்து அமைச்சக ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!!

வடகொரியாவில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற நிதி அமைச்சக ஊழியர்கள் ஐந்துபேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஐவரும், பார்ட்டியின்போது மிகப்பெரிய இராணுவ பலம் கொண்ட தங்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும், நாடு வறுமையில் வாடும் தன் குடிமக்களுக்காக குறைந்த அளவிலான நுகர்வோர் பொருட்களை தயாரிப்பதாகவும், தொழில் துறையில் ஒரு மறுமலர்ச்சி வேண்டும் என்றும் வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.அத்துடன் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மேற்கொள்வதற்காக வடகொரியா மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை நாடுவது அவசியம் என்றும் கூறியுள்ளார்கள்.இந்த தகவல் வடகொரிய அதிபர் கிம்முக்கும், பொருளாதார அமைச்சக தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் அந்த ஐவர் மீதும் துறை ரீதியான விசாரணை ஒன்றை துவக்கியதாகவும் கூறப்படுகிறது.விடயம் வெளியே வந்து விட்டதை அறியாத ஐந்து பேரையும் கூட்டம் ஒன்றிற்கு வரவழைத்து கைது செய்த அதிகாரிகள், நாட்டின் தலைமையை அவமதித்ததாக அவர்கள் ஐவரையும் ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.பின்னர், ராணுவ வீரர்களின் ஒரு பிரிவு, சரமாரியாக சுட்டு அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அவர்கள் ஐவரின் குடும்பத்தினரும் முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தன் உறவினரான Jang Song-thaek என்பவரையே இதே சுட்டுக்கொல்லும் வீரர்கள் பிரிவை வைத்து சுட்டுக்கொன்று விட்டு, அவரது தலையை பார்வைக்கு வைத்தாராம் கிம். அப்படியிருக்கும்போது, தன் அரசை விமர்சித்த ஊழியர்களை சும்மா விடுவாரா என்ன!