இன்று 6 மணி முதல் நாளை மாலை 6 மணிவரை வீட்டிலிருந்து வெளியே போக வேண்டாம்….!

காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களை கைது செய்வது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இன்று மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்கள் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதி காவல் துறை மா அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

காவல் துறையினரின் இந்த விசேட நடவடிக்கைக்காக 45,000 காவல் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என வும் பிரதி காவல் துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.எனினும் ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுவருடத்திற்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்..!! வெளியான முக்கிய தகவல்.!