13 வயதுச் சிறுமியை லட்சங்களில் விலைக்கு வாங்கி திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞன்..!!

இந்தியாவில் 13 வயது சிறுமியை லட்சங்களில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய 30 வயது நபர் அவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி தன்னுடன் கூட்டி சென்றுள்ளார்.பின்னர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்று அங்கு Basanti Lal Dadeech (30) என்ற நபரை சந்தித்து அவனிடம் சிறுமியை ரூ 2.70 லட்சத்துக்கு விற்றிருக்கிறார்.இதையடுத்து சிறுமியை, Basanti தனது கிராமத்து அழைத்து சென்று ஊர் மக்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்திருக்கிறார்.7 மாதங்களாக சிறுமியுடன் வாழ்ந்து வந்த Basanti அவரிடம் தவறாகவும் நடந்து கொண்டார்.இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சிறுமி அங்கிருந்து தப்பி தனது நிலை குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டனர்.சிறுமி கூறுகையில், Basantiம் அவர் சகோதரரும் சேர்ந்து என்னை இரக்கமில்லாமல் அடித்து துன்புறுத்தினார்கள்.நடுவில் என் பெற்றோருக்கு இது குறித்து போனில் தகவல் சொன்னேன், ஆனால் லொக்டவுண் முடிந்தவுடன் வந்து என்னை அழைத்து செல்வதாக அவர்கள் கூறிவிட்டனர் என தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் Basanti உள்ளிட்ட சில மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.