கொழும்பு வாழ் மக்களுக்கு முகக் கவசங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை.!! இப்படியும் நடக்கிறது.!

கொழும்பு, கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் மதியம் மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மீண்டும் பயன்படுத்த முடியாத 3,128 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.புறக்கோட்டை பொலிஸாருடன் அந்த இடத்தை சுற்றிவளைத்த போது அங்கு ஆயிரக்கணக்கான நீலம், வெள்ளை மற்றும் KN 95 ரக முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்ததாக கோட்டை பொது சுகாதார பரிசோதகர் எம்.பீ.லால் தெரிவித்தார்.பின்னர் மேற்கொண்ட விசாரணையில், மழையில் நனைந்த காரணத்தால் முகக் கசவங்களை இவ்வாறு உலர வைத்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.எனினும், சந்தேகத்திற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த முகக் கவசங்கள் சீல் வைப்பதற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொளள்ப்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான மோசடியான செயற்பாடுகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.