யாழ் நகரில் மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடரும் தங்கத்தின் விலை..!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையில் இன்று மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது. அதன்படி 22 கரட் தூய தங்கத்தின் இன்றைய விலை 89 ஆயிரத்து 830 ரூபாயாகக் காணப்படுகிறது.நாட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் இறக்குமதி மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த 15 சதவீத வரியை நீக்குவதாக ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.அதனால், நாட்டில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையால் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த விலைக் குறைப்பு உடனடியாகக் சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ள தங்கம் இறக்குமதியாளர்கள், படிப்படியாகவே விலை குறைப்பு இடம்பெறும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.