ஐந்து வயதுச் சிறுமி கொலை வழக்கில் தாயை குற்றவாளியாக அறிவித்த லண்டன் பொலிஸார்.!!

கடந்த ஒரிரு மாதங்களிற்கு முன், 5 வயது மகள் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பிள்ளையின் தாயை லண்டன் பொலிஸார் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.35 வயதான சுதா சிவானந்தம் என்ற இந்த பெண், தென் மேற்கு லண்டனில் மிட்சாம் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டில் தனது மகளைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுதா சிவானந்தம் என்ற இந்த இன்று விம்பில்டன் நீதவான் நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.தெற்கு மிட்சம் என்ற பகுதியில் கடந்த ஜூன் 30 ஆம் திகதி சாயகி சிவானந்தம் என்ற 5 வயது பெண் குழந்தையை இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.மகள், தாய் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில். இரண்டு பேரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சாயகி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.காயமடைந்த பெண்ணுக்கு நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்ட நிலையிலேயே, இன்றைய தினம் அவர் குற்றவாளியாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது என்பதை முழுமையாக புரிந்துக்கொள்ள மிகவும் கடுமையாக உழைத்துவிசாரணைகள் நடந்து வருவதாக தலைமை புலனாய்வு அதிகாரி ஜஸ்டின் ஹோவிக் தெரிவித்துள்ளார்.