கொரோனாவினால் நடந்த விசித்திரத் திருமணம்.!! சிகிச்சைக்காக வந்த பெண்ணை காதலித்து கரம்பிடித்த முதியவர்..!!

காதலுக்கு வயது தடையா? அல்லது வயது வித்தியாசம் தடையா? உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. 70 வயதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும் என்பதை ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓம்கர் சிங் என்ற 70 வயது முதிய்வர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது பக்கத்தில் இருந்த படுக்கையில் குடிபாய் என்ற 55 வயது பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இரண்டு பேரின் படுக்கைகளும் அடுத்தடுத்து இருந்ததால் இருவரும் அவ்வபோது பேசிக் கொண்டு வந்தனர். பின், மூன்று நாட்களில் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். சிகிச்சை முடிந்தபின் ஓம்கர் சிங் தனது சொந்த ஊரான பூராகேடி கிராமத்திற்கு குடிபாயை அழைத்துச் சென்றுள்ளார்.அங்குள்ள தனது 4 மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகளிடம் குடிபாயை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றுள்ளார். பின் கிராம மக்கள் முன் புத்தாடை அணிந்து மேளதாளத்துடன் ஊர்மக்கள் நடனமாட இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.சிறப்பு நிகழ்ச்சிக்காக குடிபாய் ஒரு தங்க மற்றும் பழுப்பு நிற சேலை அணிந்திருந்தார், அதே நேரத்தில் ஓம்கர் சிங் மஞ்சள் தலைப்பாகை அணிந்திருந்தார். ஓம்கர் சிங்கின் முதல் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.