கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து, சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் இறுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவு செயல்படுத்தப்படும். குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வருகை தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
