மத்திய கிழக்கிலிருந்து 472 இலங்கையர்கள் இன்று மீண்டும் கொழும்பிற்கு..!!

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இன்று மொத்தம் 472 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 405 இலங்கையர்கள் துபாயிலிருந்து சிறப்பு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே -648 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 2.02 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.அதேபோன்று கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூஆர் – 668 என்ற விமானத்தில் 67 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.