அதிகாலையில் வீடு புகுந்து பயங்கரத் தாக்குதல்..!! தளபாடங்கள், வாகனங்கள் தீக்கிரை.!! யாழ் நகரில் பயங்கரம்.!!

யாழ்.சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன், வீட்டிலிருந்த பொருட்கள், கதவுகள் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. அதிகாலை அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளையில் இனந்தெரியாத குழுவொன்றினால் குறித்த தாக்குதுல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தபோதிலும், ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.மற்றைய மோட்டார் சைக்கிள் சிறியளவில் எரிந்துள்ளது.மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததன் காரணமாகவீடு முழுவதும் தீ பரவி வீட்டிருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.