யாழில் பட்டப்பகலில் நடந்த துணிகரத் திருட்டு.!! வீடு உடைத்து பெருமளவு நகைகள் பணம் கொள்ளை..!!

ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டை உடைத்து 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை ) இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்த போது, வீட்டின் கதவுகள் உடைத்திருந்துள்ளன. அதுதொடர்பில் ஆராய்ந்த போதே 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்