கொரோனா அச்சம்…வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 664 இலங்கையர்கள் இன்று மீண்டும் கொழும்பிற்கு..!!!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 664 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.


அதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளான கட்டாரிலிருந்து 89 இலங்கையர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 293 இலங்கையர்களும் சவுதி அரேபியாவிலிருந்து 290 இலங்கையர்களும் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.நாடு திரும்பிய அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரையில் அவர்களை விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து குறித்த அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.