பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றாரா மஹிந்த?? வெளியான உண்மைத் தகவல்..!!

ஓய்வுபெறும் எண்ணம் இப்போது தனக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.இன்னும் 2 வருடங்களில் தாம் ஓய்வுபெறப் போவதாக ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.இரண்டு வருடங்களின் பின்னர் பிரதமர் பதவியையோ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ இராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கில்லை. மக்கள் என்னை ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்துள்ளனர், அந்த காலம் முடிவடைவதற்கு முன்னர் விலகமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஊடகங்களில் முரணான செய்திகள் வெளியாகின்ற போதிலும் இரண்டு வருடங்களின் பின்னர் விலகிச்செல்வதற்கான திட்டம் எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.