தலைநகரில் பொழியும் அடை மழை….வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்…!

நேற்றிரவு (08) முதல் நாட்டின் பல பகுதிகளிலும் பொழிந்து வரும் பலத்த மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று (09) அதிகாலை 4.30 மணிக்கு முடிவடைந்த கடந்த 20 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் 121 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காலி மாவட்டத்தில் கஹடுவ பகுதியில் 112 மி.மீ மழை பெய்துள்ளது. எத்தகண்டுர பகுதியில் 105 மி.மீ மழையும், உடுகம பகுதியில் 101 மி.மீ மழையும் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி பகுதியில் 104 மி.மீ மழை பெய்துள்ளது.கொழும்பு புறநகரில் பல பகுதிகளும் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக கலை பீடத்தின் முன்னால் உள்ள வீதி இன்று காலை வெள்ளத்தில் மூழ்கியது. மருதானை ஆர்மர் ஸ்ட்ரீட், டீன்ஸ் வீதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.