நாட்டில் நேற்று மட்டும் 17 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!!

நாட்டில் நேற்று 17 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 3,140 ஆக உயர்ந்துள்ளது.கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒன்பது கைதிகளும், காட்டாரிலிருந்து வருகை தந்த ஆறு பேரும், குவைத்திலிருந்து வருகை தந்த இருவரும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆகியுள்ள நிலையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 193 பேர் சிக்சை பெற்றும் வருகின்றனர்.மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 37 பேரும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.