பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு..!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜெயசேகர, இன்று (08) காலை 11.30 மணியளவில் சிறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று மதியம் 1.00 மணிக்கு கூடியது. இதன்போது எதிர்க்கட்சியின் கடுமையான ஆட்சேபனைக்கு மத்தியில் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டிருந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இதனால், இன்றைய அமர்வின் போது பிரேமலால் ஜயசேகரவின் பதவி பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கருப்பு பட்டியையும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.