அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயாராகும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ.!! வெற்றிடத்தை நிரப்பவும் மற்றுமொருவர் தயார்.!!

இன்னும் இரண்டு வருடங்களில் அதாவது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயாராகி வருவதாக தெரியவருகிறது.சில தினங்களுக்கு முன்னர் ஆங்கில தேசிய பத்திரிகை ஒன்று இதனை உறுதிப்படுத்தியிருந்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியுடன் 75 வயதை பூர்த்தி செய்யும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு வருடங்களில் ஓய்வுபெற்ற பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு மற்றுமொரு ராஜபக்ச நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.நிறைவேற்றப்படவுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட உள்ளது. இதனடிப்படையில், மகிந்த ராஜபக்ச ஓய்வுபெற்ற பின்னர் பிரதமர் பதவிக்கு ஏற்படும் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.