பல்கலைக்கழகம் செல்லக் காத்திருந்த இளைஞன் கோர விபத்தில் பலி…!! எமநாக வந்த கெப் வண்டி..!!

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கஹவத்தை மாதம்பை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியமையினால் 21 வயதுடைய, பல்கலைக்கழக அனுமதி பெற்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கெப் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் எதிர்பக்கம் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன் 15 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சரியான முறையில் பயணித்துள்ளார் என கஹவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கெப் வண்டியின் சாரதியின் கவனயீனம் காரணமாகவும், வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டமையினாலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காவிந்த லக்ஷான் என்ற இளைஞன் ரக்வான பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்காலிகமாக மேலதிக வகுப்பு ஆசிரியராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.