கொரோனா தொற்று தொடர்பில் வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்.!!

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையை பொறுத்தவரை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனினும், வடக்கு மக்கள் சமூக தொற்று தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளியினைப் பேணி சமூகத் தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரேபிய நாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் வடக்கில் பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.சமூகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் இனங்காணப்படாத போதிலும், மக்கள் சமூக தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.