25 மில்லியன் மக்களுக்கு ஜனவரியில் கொவிட்-19 தடுப்பு மருந்து.!! அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.!!

அவுஸ்ரேலியாவின் 25 மில்லியன் மக்கள் ஜனவரி மாதத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்துகளைப் பெறுவார்கள் என பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.ஆனால், அதற்கான உறுதி அளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதர்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இதனிடையே இரு நம்பிக்கை தரும் சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றால் 85 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளைப் பெற இயலும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.இதுகுறித்து பிரதமர் ஸ்கொட் மோரிசன் கூறுகையில், ‘தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டால் 2021ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கக்கூடிய இரு ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளது.இதன் விலை 1.24 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.நமது மருத்துவ நிபுணர்கள் அந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கினால் அவுஸ்ரேலியா முதல் இடத்தில் இருக்கும். தங்கள் நாட்டிற்கு மட்டுமல்லாமல் தங்களின் அண்டை பகுதிகளான பசிபிக் மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கும் தடுப்பு மருந்து கிடைப்பதை உறுதி செய்யும்’ என கூறினார்.குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக தடுப்பு மருந்து முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. சிறு குழுக்கள் மீது அந்த தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. அவுஸ்ரேலியா 95 சதவீத தடுப்பு மருந்து வீதத்தை இலக்காகக் கொண்டுள்ளது.