நபர் ஒருவரைக் கொலை செய்த குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று வழங்கப்பட்ட மரணதண்டனை..!!

நபர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 25 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றையதினம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பதுளை உயர் நீதிமன்றமே நீண்ட வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் இன்றையதினம் இந்த தீர்ப்பை அறிவித்தது.சந்தேகநபர் 1995 ஆம் ஆண்டு பண்டாரவளையில் உள்ள மீரியபெட்ட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒருவரை வெட்டிக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.நீண்ட விசாரணைய அடுத்து இன்றையதினம் மரணதண்டனை விதிக்கப்பட்டது.மீரியபெட்டவில் வசிக்கும் 52 வயதான ஒருவருக்கே இந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.