என் மக்களுக்கு எதனையும் செய்யமுடியவில்லை…ஆளும் தரப்பு எம்.பி கடும் அதிருப்தி..!!

தன்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தனக்கு இதுவரை முடியவில்லை என பொதுஜன பெரமுன காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகத் தான் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தான் அரசியலில் சுமார் பத்து ஆண்டுகளாக இருப்பதாகவும், தனக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தனது கடமை என அவர் தெரிவித்துள்ளார்.இந்நாட்டில் இன்று அரசியலுக்குள் இருப்பது விளையாட்டுத்தனமாக இருக்கிறது. மக்களுக்கு நேர்மையாகச் சேவை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வந்ததாகவும், அவ்வாறு செய்ய இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.