பரபரப்பான முதலாவது ரி-20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.!!

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்தது.சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 66 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில் கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சட்சன் மற்றும் அஸ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனைத்தொடர்ந்து 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்தது.இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், டாவிட் மாலன் 58 ஓட்டங்களையும், ஆரோன் பின்ஞ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணி சார்பில், 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்ட 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டாவிட் மாலன் தெரிவுசெய்யப்பட்டார்.இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) இதே சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.