பெற்றோரின் அசண்டையீனத்தால் பரிதாபமாகப் பலியான இரண்டு வயதுக் குழந்தை..!!

மதில் ஒன்று உடைந்த வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது;வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்ட மதில் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த போது, குறித்த மதில் எதிர்பாராத விதமாக சிறுமி மீது இடிந்து விழுந்து பலியாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகரை சேர்ந்த என்.முஷ்ரிபா (2 வயது) என சிறுமியே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுமியின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.