கொரோனாவுக்கான தடுப்பூசி .!! கையை விரித்தது உலக சுகாதார அமைப்பு.!!

கொரோனாவுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் கூட கிடைப்பது சாத்தியமில்லையென உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் பேசிய அவர்,

உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட, செயல்திறன் உடைய, மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.அடுத்த ஆண்டின் நடுப்பகுதி வரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை நாம் எதிர்பார்க்கவில்லை.3ஆவது கட்ட பரிசோதனைக்கு அதிக காலம் எடுககும். ஏனெனில் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் உணர வேண்டும்.மேலும், அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாங்களும் காண வேண்டும். சோதனைகளின் அனைத்து தரவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரியாது.இந்தக் கட்டத்தில் அது பயனுள்ள செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் அளவைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதற்கான தெளிவான சமிக்ஞை எங்களிடம் இல்லை.உலக சுகாதார அமைப்பும் கவி தடுப்பூசி கூட்டணியும் இணைந்து கோவாக்ஸ் எனப்படும் உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீடு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.